Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஐ.பி.எல் 2021 முதல் போட்டி சென்னையில் !

T

The Leader Desk

மார்ச் 7, 2021 • 10:32 AM

ஐ.பி.எல் 2021 முதல் போட்டி சென்னையில் !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.
  • இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
  • அதற்கு அடுத்தநாள், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை டெல்லியை எதிர்த்து களம் காண்கிறது.
  • மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்தநாள், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை டெல்லியை எதிர்த்து களம் காண்கிறது.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோதி மைதானத்தில் பிளே ஆஃப் போட்டிகளும், மே 30-ல் இறுதிப் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து, வழக்கம்போல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் (இந்தியன் ப்ரீமியர் லீக்) டி20 போட்டிகள் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்களுக்கு அனுமதி?

கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விதிமுறைகளை கடைப்பிடித்து ஐபிஎல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் பிசிசிஐ இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நம்பிக்கையுடன் நடத்த திட்டமிட்டுள்ளது என ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஐபிஎல் போட்டியின் லீக் கட்டத்தில் ஒரு அணி மூன்று முறை மட்டுமே பயணம் செய்யுமாறு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகப் பார்வையாளர்கள் அற்ற நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் போட்டிகள் செல்ல செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...