Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பொதுபலசேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம்!

T

The Leader Desk

மார்ச் 9, 2021 • 2:33 AM

பொதுபலசேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 8 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
  • நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அவ்வாறான நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை.
  • இந்த அறிக்கை தொடர்பில் 3 நாட்கள் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படும்.
  • எதிர்வரும் 10 ஆம் திகதியன்று விவாதம் ஆரம்பமாகும் என அமைச்சர் ஜீ.எல்.
எழுத்து அளவு:

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 8 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் சிலர் குறை கூறுகின்றனர். ஆ​ணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்.

அதில் ஒன்றை குறிப்பிட்டுக் கூறுவதென்றால், பெளத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பை தடை செய்யக்கோரி ஜனாதிபதி ஆ​ணைக்குழுவினால் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவ்வாறு கூறப்பட்டிருப்பினும் பொதுபலசேனா அமைப்பை நாம் தடை செய்​யமாட்டோம். 

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாம் போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார்.

மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“மத்ரசா பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள், பாட விதானங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுப்போம்.

மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு.

பாதுகாப்பு செலாளராக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்ட காலத்தில் வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு வீசா வழங்கும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டது.

புலனாய்வுத்துறையினரின் ஆலோசனைகள் பெற்றதன் பின்னரே வெளிநாட்டு பயணி ஒருவருக்கு இலங்கை வருவதற்கான வீசா வழங்கப்பட்டு வந்தது.

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அவ்வாறான நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை. வெளிநாட்டு பயணிகளுக்கு ‘ஒன் எரய்வல் வீசா’ வழங்கப்பட்டது. இவையும் நாட்டின் பாதுகாப்புக்கு ஓர் பாதிப்பாகும். என்றார்.

நாம் சிலரை பாதுகாப்பதாக கூறுகின்றனர். நாம் யாரையும் பாதுகாக்கவும் இல்லை. யாரையும் கஷ்டத்துக்குள்ளாக்கவும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு நாம் பொறுபேற்க முடியாது.

இந்த அறிக்கை தொடர்பில் 3 நாட்கள் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படும். எதிர்வரும் 10 ஆம் திகதியன்று விவாதம் ஆரம்பமாகும் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொதுபலசேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம்! | Tamil Leader | We Lead the Nation