Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு பெண்கள் உரிமை காணப்படுகின்றது! ருவன் விஜேவர்தன

T

The Leader Desk

மார்ச் 8, 2021 • 4:15 PM

பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு பெண்கள் உரிமை காணப்படுகின்றது! ருவன் விஜேவர்தன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் மேலும் கூறியதாவது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர்தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
  • எனினும் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களது நிலைமை பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளது.
  • இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியிலே அவர்கள் மேலும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எழுத்து அளவு:

அவர் மேலும் கூறியதாவது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர்தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையை பொருத்தமட்டில் முதல் பெண் பிரதமரை உருவாக்கியமை தொடர்பில் பெருமைக் கொள்வதுடன், பெண் ஜனாதிபதியொருவரும் பதவிவகித்துள்ளார் என்று பெருமிதம் கொள்ள முடியும். இவ்வாறு ஆரம்பத்தில் பெண்களுக்கு பல முதல்நிலை பொறுப்புகளை வழங்கிய எமது நாட்டில் இன்றைய பெண்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது. உலக சனத்தொகையில் பெண்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக காணப்படுகின்றது.

பெண்கள் தங்களது குடும்பத்திற்கு மட்டுமன்றின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். பணிப்பெண்களான வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், தேசிய வருமானத்திற்கு பெரும் உந்துசக்தியாக செயற்பட்டு வருகின்றார்கள். எனினும் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களது நிலைமை பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளது. இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியிலே அவர்கள் மேலும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதற்கமைய பெண் பிரதி பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நபர்களிருக்கும் இந்த நாட்டில், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் கழுத்திலிருக்கும் தங்கச் சங்கிலிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதன் ஆரம்ப கட்டமாக எமது கட்சியிலுள்ள பிரதான வெற்றிடங்களில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்குவார் என்று எண்ணுகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்திலிருந்தே பெண்களின் நலன் கருதி சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதனைப்போன்று தொடர்ந்தும் பெண்களுக்கான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு பெண்கள் உரிமை காணப்படுகின்றது! ருவன் விஜேவர்தன | Tamil Leader | We Lead the Nation