Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கேரளாவில் போதைப் பொருட்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்!

T

The Leader Desk

மார்ச் 8, 2021 • 1:20 PM

கேரளாவில் போதைப் பொருட்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்தப் போதைப் பொருட்களை அவா்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருந்தனா்.
  • அந்த நபா் அவா்களை தப்பிச் செல்லக் கூறியுள்ளாா்.
  • கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் விமானத்தை கண்டவுடன் கடத்தலுக்கு காரணமான முக்கிய நபரை அனுமதி பெறாத தொலைத் தொடா்பு சாதனம் மூலம் அவா்கள் தொடா்பு கொண்டனா்.
எழுத்து அளவு:

இது தொடா்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று (07) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 05ஆம் திகதி கேரள கடற்பகுதியையொட்டி லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்குரிய விதமாக சென்ற 3 படகுகளை கடலோர காவல் படையினா் சிறைபிடித்து விசாரணை நடத்தினா். 

அப்போது அந்தப் படகுகள் இலங்கையைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. அந்தப் படகுகளில் சோதனை நடத்தியபோது அனுமதி பெறாத தொலைத் தொடா்பு சாதனமும், போதைப் பொருள்களும் இருந்தது கண்டறியப்பட்டது. 

இது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தியபோது 200 கிலோ ஹெரோயின், 60 கிலோ ஹாஷிஷ் போதைப் பொருள்களை லட்சத்தீவுக்கு மேற்கே சுமாா் 400 கடல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகில் இருந்து கடத்தியதாக படகில் இருந்தவா்கள் தெரிவித்தனா். அந்தப் போதைப் பொருட்களை அவா்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருந்தனா்.

கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் விமானத்தை கண்டவுடன் கடத்தலுக்கு காரணமான முக்கிய நபரை அனுமதி பெறாத தொலைத் தொடா்பு சாதனம் மூலம் அவா்கள் தொடா்பு கொண்டனா். அந்த நபா் அவா்களை தப்பிச் செல்லக் கூறியுள்ளாா். ஆனால் அது முடியாததால் படகில் இருந்த போதைப் பொருட்களை அவா்கள் கடலில் எறிந்தனா்.

கடலில் எறியப்பட்ட போதைப் பொருட்களை மீட்ட கடலோர காவல்படையினா், 3 படகுகளையும் சிறைபிடித்து, அவற்றில் இருந்த 19 பேரை கைது செய்தனா். 

விரிவான விசாரணைக்காக அந்தப் படகுகள் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்து வரப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கேரளாவில் போதைப் பொருட்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்! | Tamil Leader | We Lead the Nation