Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கறுப்பு ஞாயிறு தொடங்குகிறது! தேசிய பிக்கு முன்னணி இணைகிறது

T

The Leader Desk

மார்ச் 7, 2021 • 9:32 AM

கறுப்பு ஞாயிறு தொடங்குகிறது! தேசிய பிக்கு முன்னணி இணைகிறது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, இன்று நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கலந்துகொள்ளும் மக்கள் கறுப்பு உடையணிந்து அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெறும் என மல்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்தார்.
  • ஏப்ரல் 21, 2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது, இதில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் ஐ.ஜி.பி.
எழுத்து அளவு:

அதன்படி, இன்று நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கலந்துகொள்ளும் மக்கள் கறுப்பு உடையணிந்து அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தெய்வீக வழிபாட்டிற்கு பிறகு தேவாலயத்திலிருந்து வெளியே வந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அமைதியான போராட்டம் நடத்த நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பேராயர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டின் தலைவர்,அதி மேற்றிராணையார் பிஷப் வின்ஸ்டன் பெநாந்து, ஐந்து காரணிகளின் அடிப்படையில் இன்று கறுப்பு ஞாயிறு  அனுஷ்டிக்கப்டும் என்று கூறினார்.

தெய்வீக வழிபாட்டிற்குப் பிறகும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அனைத்து தேவாலயங்களும் அமைதியான எதிர்ப்புத் தெரிவிக்கத் தயாராகி வருவதாக பிஷப் மேலும் தெரிவித்தார்.

கறுப்பு ஞாயிறு கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில்  இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெறும் என மல்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் நேற்று 'கிராமத்துடனான உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த தாக்குதல் குறித்து கார்டினலின் வலி நியாயமானது என்றும், அதைப் பற்றி பேசுவது சரியானது என்றும் கூறினார்.

ஏப்ரல் 21, 2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது, இதில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் ஐ.ஜி.பி. மற்றும் உளவுத்துறை தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கறுப்பு ஞாயிறு போராட்டத்தை தேசிய பிக்கு முன்னணி ஆதரிக்கிறது!

Black Sunday Jathika Bukku Peramuna

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி, இலங்கை ஆயர்களின் மாநாட்டின் தலைமையில், மார்ச் 7, 2021 இன்று காலை 8.30 மணி முதல் காலை 9.00 மணி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள கறுப்பு ஞாயிறு போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய பிக்கு முன்னணி முடிவு செய்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் வெற்றிக்கு சிறப்பு பங்களிப்பை வழங்க தேசிய பிக்கு முன்னணி முடிவு செய்துள்ளது.

Black Sunday 1

Black Sunday 2

Black Sunday 3Black Sunday 4

Black Sunday 6

Black Sunday 7

Black Sunday 8

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...