Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மனைவியை அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை பேராசிரியருக்கு மரண தண்டனை!

T

The Leader Desk

மார்ச் 4, 2021 • 8:56 AM

மனைவியை அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை பேராசிரியருக்கு மரண தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சென்னை, அண்ணாநகர் 6-வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.
  • தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய இவருக்கும், சேலம் மேட்டூரைச் சேர்ந்த மோகனாம்பாள் என்பவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
  • கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்த மனைவி மோகனாம்பாளின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டும், கழுத்தை அறுத்தும் கண்ணன் கொலை செய்துள்ளார்.
  • இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.
எழுத்து அளவு:

சென்னை, அண்ணாநகர் 6-வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய இவருக்கும், சேலம் மேட்டூரைச் சேர்ந்த மோகனாம்பாள் என்பவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மனைவி வீட்டாரை விட கண்ணனின் குடும்பத்தினர் வசதி குறைந்தவர்கள் என்பதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்த மனைவி மோகனாம்பாளின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டும், கழுத்தை அறுத்தும் கண்ணன் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.

 இந்த வழக்கு விசாரணை சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வி.முரளிகிருஷ்ணன் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு தரப்பில் குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கண்ணனுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் சாகும்வரை தூக்கிலிடப்பட வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...