Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!

T

The Leader Desk

மார்ச் 4, 2021 • 8:49 AM

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
  • நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பலருக்கு கு இரணைதீவு மக்களால் நேரடியாகச் சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.
  • இருப்பினும் குறித்த பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எழுத்து அளவு:

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணைதீவு பிரதான இறங்குதுறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பலருக்கு கு இரணைதீவு மக்களால் நேரடியாகச் சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ இடைநிறுத்தப்படாத நிலையில் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இரணைதீவு பகுதிக்குச் செல்லும் மக்களிடம் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும், தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...