Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

விலையேற்றத்தை கண்டித்து சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

பிப்ரவரி 28, 2021 • 5:00 PM

விலையேற்றத்தை கண்டித்து சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், சம்மாந்துறை நகரில் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
எழுத்து அளவு:

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது “அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு”, “பொருட்களின் விலையை ஏற்றாதே, மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி, மக்கள் சட்டியிலிருந்து அடுப்புக்குள், பிள்ளைகள் பட்டினியை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு சலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவைக் குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...