Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

தமிழை என்னால் சரியாக கற்க முடியவில்லை! மோடி

T

The Leader Desk

பிப்ரவரி 28, 2021 • 9:57 AM

தமிழை என்னால் சரியாக கற்க முடியவில்லை! மோடி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
  • இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
  • மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும்.
  • மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய 'ராமன் விளைவு' கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று கூறினார்.

மேலும் வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...