Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2021 • 3:48 PM

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் கட்டுமுறிவுக்குளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாக்கியராசா நாகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

குறித்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் கட்டுமுறிவுக்குளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாக்கியராசா நாகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வயல் நிலத்தை பார்வையிட இரவு 7.30 மணியளவில் கட்டுமுறிவுக்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றிருந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் வயல் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்துகாட்டு யானைகளின் தாக்கம் இருந்து வருகின்ற போதிலும் மக்கள் வாழும் இடங்களில் மாத்திரம் யானை பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதி மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதியில் எதுவித பாதுகாப்பும் இல்லாமல் விவசாயிகள் இரவு நேர காவலில் ஈடுபட்டுள்ளதனால் இவ்வாறான உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...