Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பூசா சிறைச்சாலை பற்றிய ஒரு எச்சரிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2021 • 3:55 PM

பூசா சிறைச்சாலை பற்றிய ஒரு எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்படும், பூசா சிறைச்சாலையை பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களை தடுத்து வைப்பதற்கு பயன்படுத்துவதன் மூலமாக இந்த சந்தேகம் உருவாகியுள்ளது.
  • பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு தற்போது தங்காலையில் அமைந்துள்ள ஒரு தடுப்பு நிலையத்தை பயன்படுத்தி வருவதோடு, கொழும்பு மற்றும் வவுனியாவில் இந்தப் பிரிவின் ஏனைய இரு தடுப்பு நிலையங்களும் அமைந்துள்ளன.
  • மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலையில் பதினொரு கைதிகள் கொலை செய்யப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எழுத்து அளவு:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்படும், பூசா சிறைச்சாலையை பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களை தடுத்து வைப்பதற்கு பயன்படுத்துவதன் மூலமாக இந்த  சந்தேகம் உருவாகியுள்ளது.

”மஹர சிறைச்சாலையைப் போன்று கைதிகளைத் தூண்டிவிட்டு ஏராளமான கைதிகளைக் கொல்லும் முயற்சியா இது என்ற  சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.”

சிறைச்சாலைகளில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாக பல முன்னுதாரணங்கள் காணப்படுவதை, கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா நினைவூட்டினார்.

பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களாக கருதப்படும் குற்றவாளிகள், பூசா சிறைச்சாலையில்  கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய சுதேஷ் நந்திமால், அவர்களை கடுமையான குற்றவாளிகள் என பெயரிட்டு, சிறைச்சாலையில் இதுவரை அவர்களுக்கு முறையான உணவேனும் வழங்கப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார்.

"கைதிகளுக்கு சரியான உணவுகளை கொடுக்காமலும், அவர்களுக்குத் தேவையான மருந்துகளை கொடுக்காமலும் இருப்பதன் ஊடாகவும், அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள்."

பூசா சிறைச்சாலையின் கைதிகள் மீது இத்தகைய அழுத்தம் கொடுக்கும் முயற்சியானது, கைதிகளைத் தூண்டி விடுவதற்கும், மஹர சிறைச்சாலையைப் போல ஏராளமான கைதிகளைக் கொலை செய்யும் முயற்சியா இதுவென சுதேஷ் நந்திமால் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் பூசா சிறைச்சாலைக்குள் இதுபோன்ற கொலைகள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளை வலியுறுத்தியதோடு, மஹர சிறைச்சாலையின் கைதிகளை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான தடுப்பு மையமாக பூசா சிறைச்சாலையை, பயங்கரவாத விசாரணை பிரிவு பயன்படுத்தியதோடு, மைத்திரி- ரணில் ஆட்சியின் பிற்பகுதியில் பூசா சிறைச்சாலையில் இருந்து சந்தேகநபர்களை அகற்ற பயங்கரவாத விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு தற்போது தங்காலையில் அமைந்துள்ள ஒரு தடுப்பு நிலையத்தை பயன்படுத்தி வருவதோடு, கொழும்பு மற்றும் வவுனியாவில் இந்தப் பிரிவின் ஏனைய இரு தடுப்பு நிலையங்களும் அமைந்துள்ளன.

மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலையில் பதினொரு கைதிகள் கொலை செய்யப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்த அனைவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பூசா சிறைச்சாலை பற்றிய ஒரு எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation