Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

அப்துல்கலாம் மோடியால் தான் ஜனாதிபதி ஆனார்!பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2021 • 3:36 AM

அப்துல்கலாம் மோடியால் தான் ஜனாதிபதி ஆனார்!பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது குறித்து அவா் பேசியதாவது பா.ஜனதா தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல.
  • அப்துல் கலாம் ஜனாதிபதியான 2002-ம் ஆண்டு வாஜ்பாய் தான் நாட்டின் பிரதமராக இருந்தார்.
  • ஸ்லிப்பர் செல்களாக வேலை பார்த்து வருபவர்களை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
எழுத்து அளவு:

இது குறித்து அவா் பேசியதாவது

பா.ஜனதா தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. ஸ்லிப்பர் செல்களாக வேலை பார்த்து வருபவர்களை தான் நாங்கள் எதிர்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி பல சாதாரண மக்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். அவர் தான் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நாட்டின் குடியரசு தலைவராக ஆக்கினார். அப்துல் கலாமை மதத்தின் காரணமாக ஜனாதிபதி ஆக்கவில்லை. விஞ்ஞானியாக அவரின் அளப்பரிய பணிகளுக்காக தான் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அப்துல் கலாம் ஜனாதிபதியான 2002-ம் ஆண்டு வாஜ்பாய் தான் நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தார். எனவே மோடி தான் அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கினார் என பா.ஜனதா தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேன எம்.பி. சஞ்சய் ராவத், ‘‘அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கியது வாஜ்பாயின் மிகப்பெரிய நடவடிக்கை. அந்த பெயரை பறிக்க முயற்சி செய்வது அபத்தமானது" என்றார்.

இதேபோல சந்திரகாந்த் பாட்டீலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சி, “உண்மையான தேசபக்தரான அப்துல்கலாமை அவமதித்து சந்திரகாந்த் பாட்டீல் பாவம் செய்துவிட்டது. அப்துல் கலாம், வாஜ்பாயால் முன்மொழியப்பட்டு அனைத்து கட்சியினராலும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர்” எனவும் காங்கிரஸ் தொிவித்து உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...