Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2021 • 3:06 PM

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
  • இந்நிலையில், உள்நாட்டில் நீதியை இனியும் எதிர்பார்க்க முடியாது எனவும் சர்வதேசமாவது நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
  • இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எழுத்து அளவு:

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டு தொடர்ந்து போராடி வருகின்ற தாய்மார்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், உள்நாட்டில் நீதியை இனியும் எதிர்பார்க்க முடியாது எனவும் சர்வதேசமாவது நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், தங்களது விவகாரம் தொடர்பாக உரிய தீர்வு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் வகையில் தீச்சட்டி ஏந்தி இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, தாய்மார்கள் பலர் போராட்ட இடத்திலேயே தனது குழந்தைகளை இழந்து படும்வேதனையைக் கூறி, கதறி அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை உலுக்கியதுடன் சில தாய்மார் போராட்ட இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...