Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கெஹலியவின் மர நடுகை விழாவின் பின்னர் பாடசாலை நிகழ்வுகளுக்குத் தடை!

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2021 • 3:16 AM

கெஹலியவின் மர நடுகை விழாவின் பின்னர் பாடசாலை நிகழ்வுகளுக்குத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்குமாறு கல்விச் செயலாளர் உத்தரவிட்டுள்ள விடயத்தையும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • கொரோனா பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
  • பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண வலய, கல்வி அதிகாரிகள, மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தார்.
எழுத்து அளவு:

பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை  நிறுத்தி வைக்குமாறு  கல்விச் செயலாளர் உத்தரவிட்டுள்ள விடயத்தையும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவிப்பு வரும் வரை  நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண வலய, கல்வி அதிகாரிகள, மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர்  நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தார்.

தொற்று நிலவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும் பல்வேறு பாடசாலைகள் பல்வேறு விழாக்களை நடத்தி வருவதாகவும், விழாக்களை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக  கல்வி அமைச்சின் செயலாளர்  தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் தொற்றுநோயை எதிர்கொண்டு கல்விச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த மாகாண கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பாடசாலை விழாக்கள் உட்பட வேறு எந்த வெளிப்புற செயற்பாடுகளையும் நடத்தக்கூடாது என க் கூடாது கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாலும், அதனை மீறி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக  ஊடக அறிக்கை ஊடாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த 12ஆம் திகதி,  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கண்டியில் அமைந்துள்ள கெங்கல மகா வித்தியாலயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஒரு விழாவை நடத்தியிருந்ததாக ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

IMG 20210212 WA0019

IMG 20210212 WA0014

இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் இது தொடர்பில் முறைப்பாட்டையும் பதிவு  செய்துள்ளது.

இவ்வாறான ஒரு சூழலில் பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை  நிறுத்திவைக்குமாறுஅனைத்து மாகாண, வலய கல்வி அதிகாரிகள், பிரிவெனாக்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...