Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

முஸ்லிம் எம்.பி.க்களுக்கு பசில் அளித்த வாக்குறுதி தெரியவந்துள்ளது!

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2021 • 4:31 AM

முஸ்லிம் எம்.பி.க்களுக்கு பசில் அளித்த வாக்குறுதி தெரியவந்துள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பசில் ராஜபக்ச உறுதியளித்தமையினால், 20 வது திருத்தத்தை ஆதரித்ததாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கூறுகையில், நாங்கள் 20 ம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காகும் .ஆனால் இதுவரைக்கும் அவர்கள் அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கவில்லை.
  • வது திருத்தத்தை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம்,எச்.எம்.
எழுத்து அளவு:

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பசில் ராஜபக்ச உறுதியளித்தமையினால், 20 வது திருத்தத்தை ஆதரித்ததாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

20 வது திருத்தத்தை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம்,எச்.எம். எம்.ஹரிஸ்,எம்.எஸ்.தௌ​பீக்,ஹாபிஸ் நசீர் ஆகியோர் ஆதரித்தனர்.

 இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கூறுகையில்,

நாங்கள் 20 ம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காகும் .ஆனால் இதுவரைக்கும் அவர்கள் அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கவில்லை.

இருப்பினும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் நேற்று கூடி 20 தை ஆதரித்த உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி எடுக்க வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...