Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இன்னும் திருத்தப்படாத நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிற்கும் வடதாரகை படகு!

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2021 • 2:04 PM

இன்னும் திருத்தப்படாத நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிற்கும் வடதாரகை படகு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெடுந்தீவு கடல் மார்க்கப் போக்குவரத்து சேவைகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான குமுதினி மற்றும் வடதாரகை ஆகிய படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்தன.
  • இதில் வடதாரகை திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், நெடுந்தீவுக்கான போக்குவரத்து மற்றும் அங்கே காணப்படுகின்ற இடர்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இதற்கமைய, இதன் வேலைகளுக்காக 35 .5 மில்லியன் ரூபாய் நிதி தேவை என 2019ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது அதற்கான தேவை மேலும் 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஆகி உள்ளது எனவும் கூறினார்.
எழுத்து அளவு:

நெடுந்தீவு கடல் மார்க்கப் போக்குவரத்து சேவைகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான குமுதினி மற்றும் வடதாரகை  ஆகிய படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்தன.

இதில் வடதாரகை  திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கென வடமாகாண சபையால் வழங்கப்பட்ட நெடுந்தாரகை படகு பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நெடுந்தீவுக்கான  போக்குவரத்து மற்றும் அங்கே காணப்படுகின்ற இடர்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதன் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளதென்றார்.

இதற்கமைய, இதன் வேலைகளுக்காக 35 .5 மில்லியன் ரூபாய் நிதி தேவை என 2019ஆம் ஆண்டு மதிப்பீடு  செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது அதற்கான தேவை மேலும் 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஆகி உள்ளது எனவும் கூறினார்.

அத்துடன், நீண்ட காலம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், குமுதினி படகு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும், சத்தியசோதி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...