Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

போதியளவு நெல் உலரவிடும் தளமின்மையால் விவசாயிகள் அவதி!

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2021 • 8:52 AM

போதியளவு நெல் உலரவிடும் தளமின்மையால் விவசாயிகள் அவதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த நிலைமை போதியளவு நெல் உலரவிடும் தளமின்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலரவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
  • இவ்வாறு வீதிகளில் மூட்டை மூட்டைகளாக வீதிகளில் நெற்களை குவித்து உலர விடுவதனால் வீதியில் விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
எழுத்து அளவு:

அம்பாரை மாவட்டத்தில் 63,000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக விவசாயிகள் தமது ஈரப்பதமான நெற்களை உலரவிடுவதற்காக இச்சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

குறித்த நிலைமை போதியளவு நெல் உலரவிடும் தளமின்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலரவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை , பாலமுனை , ஒலுவில் ,பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று ,நிந்தவூர் ,சம்மாந்துறை, காரைதீவு ,கல்முனை ,நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் , 6 ம் கொலனி , ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது.

இவ்வாறு வீதிகளில் மூட்டை மூட்டைகளாக வீதிகளில் நெற்களை குவித்து உலர விடுவதனால் வீதியில் விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதே வேளை கொரோனா அனர்த்தத்தின் மத்தியிலும் இம்முறை இம்மாவட்டத்தில் 63,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் மற்றும் தனியார் கடன்களின் மூலம் விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக நெற்களில் ஈரப்பதனை அகற்ற உலர்தளம் இன்மையினால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...