Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இன்று உலக வானொலி தினம்!

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2021 • 5:27 PM

இன்று உலக வானொலி தினம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதலாவது உலக வானொலி தினம் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13-இல் கொண்டாடப்பட்டது.
  • ஒலி அதிர்வுகளின் மூலம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பும் சோதனையை மார்கோணி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள ஒரு மலையின் உச்சியில் செய்து வெற்றி கண்டார்.
  • வானொலி ஒலிபரப்பு சேவையைக் கொண்டாடவும் சர்வதேச வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
எழுத்து அளவு:

முதலாவது உலக வானொலி தினம் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13-இல் கொண்டாடப்பட்டது.

“புதிய உலகம் – புதிய வானொலி ” எனும் தொனிப்பொருளில் இவ்வருட உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது.

ஒலி அதிர்வுகளின் மூலம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பும் சோதனையை மார்கோணி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள ஒரு மலையின் உச்சியில் செய்து வெற்றி கண்டார்.

இந்த வெற்றியின் பின்னர் உருவானது தான் வானொலி.

இதனைத் தொடர்ந்தே நாம் தற்பொழுது பாவிக்கும் நவீன வானொலிகள் உருவாகின.

வானொலி ஒலிபரப்பு சேவையைக் கொண்டாடவும் சர்வதேச வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும்.

பொழுதுபோக்கு அம்சங்கள், தகவல் பரிமாற்றங்களுக்கு அப்பால் சாதாரண சமூகத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும்.

இசையை உணரும் ஒவ்வொரு ரசிகனும் இரசனைமிக்க கலைஞன் ஆகின்றான்.

உலகைக் காண முடியாத பலருக்கும் உலகை உணரச்செய்யும் இசையை செவிகளில் சேர்க்கும் சேவையை பல வருடங்களாக வானொலி ஆற்றி வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...