Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மீண்டும் சினிமாவில் களமிறங்கும் ஷாலினி அஜித்குமார்!

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2021 • 8:31 AM

மீண்டும் சினிமாவில் களமிறங்கும் ஷாலினி அஜித்குமார்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனைத் தொடர்ந்து ஷாலினி, தல அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
  • இந்த நிலையில் ஷாலினி தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில், வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
  • அதாவது கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காதலுக்கான புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் அது ‘அலைபாயுதே’ தான்.
  • இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்க, ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.
எழுத்து அளவு:

இதனைத் தொடர்ந்து ஷாலினி, தல அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். அதற்குப் பிறகும் கண்ணுக்குள்-நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற சில படங்களில் ஷாலினி நடித்துள்ளார். கல்யாணத்துக்கு பிறகு ஷாலினி எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாலினி தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில், வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காதலுக்கான புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் அது ‘அலைபாயுதே’ தான்.

இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்க, ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீஸில் பெரும் சாதனை புரிந்தது.தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.  இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதோடு, ஷாலினியை வெள்ளித்திரைக்கு வரவேற்று கொண்டிருக்கிறாராம். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளாராம். தல அஜித்துக்கு ஆஸ்தான இயக்குனர் மணிரத்தினம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...