Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஆளில்லாத நிலங்களை வணிகர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கம் பல கோடிகளை இழந்துள்ளது!

T

The Leader Desk

பிப்ரவரி 11, 2021 • 4:44 AM

ஆளில்லாத நிலங்களை வணிகர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கம் பல கோடிகளை இழந்துள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெலி பிரதேச செயலக பிரிவில் உள்ள காணிகள் பல்வேறு நபர்கள் மூலமாக முதலீட்டிற்காக தொழிலதிபர்களுக்கு ஒப்டைக்கப்பட்டிருந்தும் அந்த காணிகளினூடாக 68 கோடி ரூபா அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
  • பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் எஸ்.
  • லட்சக்கணக்கான நிலமற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும், மேலும் இந்த ஆண்டு 150,000 நில பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.எம்.
  • மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் கிட்டத்தட்ட 90 சதவீத இராணுவ வசம் உள்ள நிலங்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறினார்.
எழுத்து அளவு:

 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெலி பிரதேச செயலக பிரிவில் உள்ள காணிகள் பல்வேறு நபர்கள் மூலமாக முதலீட்டிற்காக தொழிலதிபர்களுக்கு ஒப்டைக்கப்பட்டிருந்தும் அந்த காணிகளினூடாக 68 கோடி ரூபா அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் எஸ். எம். சந்திரசேன இதை வெளிப்படுத்தியுள்ளார்.

குச்சவெலி பிரதேச செயலக, கிழக்கு (240 பி) கிராம நிலதாரி பிரிவு திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி, இரக்கண்டி பாலம் மற்றும் சலபே ஆரு பாலம் பிரதான வீதியில் கடற் கரையோரப் பகுதியிலுள்ள நிலங்களை பெற்றுக்கொண்ட பயனர்களிடமிருந்து மட்டும் செலுத்த வேண்டிய வரி ரூ .17 பில்லியன் ஆகும் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு தகவல் துறை அவர்களின் விபரங்களை வெளியிடவில்லை.

லட்சக்கணக்கான நிலமற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும், மேலும் இந்த ஆண்டு 150,000 நில பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.எம். சந்திரசேன இங்கு தெரிவித்தார்.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரோ அரசாங்க தகவல் திணைக்களமோ இது வரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அரசாங்க புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் கிட்டத்தட்ட 90 சதவீத இராணுவ வசம் உள்ள நிலங்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறினார்.

2009 ல் கைப்பற்றப்பட்ட அரசு நிலங்களில் 89.26 சதவீதமும், தனியார் நிலங்களில் 92.22 சதவீதமும் 2019 டிசம்பர் 31 க்குள் திருப்பி பெறப்பட்டுள்ளதாக என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா.உ சிவஞானம் ஸ்ரீதரன் சமீபத்தில் உயர் ஸ்தானிகரின் அறிவித்த திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக, முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட 8,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இன்னமும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை கொன்றுள்ளதாகவும் கிளிநொச்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறினார்.

ஆகவே, இவ்வளவு பெரிய அளவில் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும்போது, ​​அரசாங்கத் தகவல்களின் அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு காணி உத்தரவுப் பத்திரத்தை வழங்கவில்லை.இதுதான் 2015 இல் நடந்தது. அரசாங்கம் முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறுகிறது ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அரசாங்க நிலங்கள் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளனதாகவும் உரிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என. எம்.எஸ் சந்திரசேன தெரிவித்துள்ளதாக அரசு தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிலம் இல்லை

வடக்கில் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களில் வசித்து வருவது சமீபத்தில் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நல மையங்களில் உள்ள 409 குடும்பங்களில் 233 நிலமற்ற குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

பிப்ரவரி 1 திங்கள் அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...