Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது இலங்கை அரசு! எமக்கு நியாயம் பெற்றுத்தர பாக். பிரதமரது விஜயம் உதவ வேண்டும்! ரிஷாட் பதியுதீன்

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2021 • 11:51 AM

எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது இலங்கை அரசு! எமக்கு நியாயம் பெற்றுத்தர பாக். பிரதமரது விஜயம் உதவ வேண்டும்! ரிஷாட் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுபற்றி கட்சியின் தவிசாளர் அமீர் அலி தெரிவித்ததாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) சுகாதார வழிகாட்டலுக்கு இணங்க, உலகத்தின் 190 நாடுகள் கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களுடைய உடல்களை அடக்கம் செய்கின்றன.
  • அத்துடன், இலங்கையிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அவர் வலியுறுத்த வேண்டும் என்பதுவும் எமது எதிர்பார்ப்பாகும்.” அத்துடன், இலங்கைக்கு பாகிஸ்தான் செய்து வருகின்ற நல்ல பல உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
  • மாறாக, இலங்கையில் மாத்திரம் கடும்போக்கு கொள்கையுடன், இந்த அரசாங்கம் தொடர்ந்தேர்ச்சியாக, எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது.
எழுத்து அளவு:

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டி அவர்களை இன்று (09) சந்தித்த இக்குழுவினர், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துக் கூறினர்.

இதுபற்றி கட்சியின் தவிசாளர் அமீர் அலி தெரிவித்ததாவது,

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) சுகாதார வழிகாட்டலுக்கு இணங்க, உலகத்தின் 190 நாடுகள் கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களுடைய உடல்களை அடக்கம் செய்கின்றன. மாறாக, இலங்கையில் மாத்திரம் கடும்போக்கு கொள்கையுடன், இந்த அரசாங்கம் தொடர்ந்தேர்ச்சியாக, எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது. இது தொடர்பில், எமக்கு நியாயம் பெற்றுத்தர பாக். பிரதமரது விஜயம் உதவ வேண்டும். அத்துடன், இலங்கையிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அவர் வலியுறுத்த வேண்டும் என்பதுவும் எமது எதிர்பார்ப்பாகும்.”

அத்துடன், இலங்கைக்கு பாகிஸ்தான் செய்து வருகின்ற நல்ல பல உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். மேலும், இலங்கை வரும் பாக். பிரதமருடன், தாங்கள் சந்தித்துப் பேசி, தமது கருத்துக்களை தெரியப்படுத்த, ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் குழுவினர் இச்சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...