Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும்! ரவூப் ஹக்கீம்

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2021 • 3:56 PM

எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும்! ரவூப் ஹக்கீம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும்.
  • இதன் காரணமாக ஒரு சில சம்பவங்கள் இப்படி நடக்கிறது.
  • எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும்.
எழுத்து அளவு:

இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும். இந்த நாட்டின் அராஜகத்திற்கு எதிராக ஒன்றுபடுகின்ற பேரணியில் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை வைப்பது ஆபத்தானது.

அது தவிர்க்கபட வேண்டியது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று பகல் (07) கல்முனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துக்கள் கேட்டபோது கல்முனை பிரதேசத்தை பேரணி கடந்து சென்ற வேளையில் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் மற்றும் வடகிழக்கு இணைப்பு தொடர்பிலான கோஷங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,

மு.கா எம்பிக்களை அந்த பேரணிக்கு ஆதரவளிக்க கூறியிருந்தேன். ஜனாஸா விடயத்தில் இந்த அரசு விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருக்கின்ற போது ஜெனீவா பிரேரணையில் இவ்விடயம் உள்ளடக்கியதாக சர்வதேச சமூகம் முன்மொழிந்திருக்கிற பின்னணியிலும் சட்டத்தின் ஆட்சியையும் உள்ளடக்கி அந்த பிரேரணை நிறைவேற்றப்பட உள்ளதனால் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் தவறிழைத்த விடுதலை புலிகளோ அல்லது அரசாங்க படையணி அதிகாரிகள் என யாராக இருந்தாலும் யுத்த குற்றம் செய்திருந்தால் மாத்திரம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதி நியாயம் என்ற விடயத்தில் சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு.கா எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கினேன். கலந்து கொள்ள வாய்ப்பிருந்த முன்னாள் எம்.பி ஏ.எல்.எம். நஸீர் உட்பட எல்லோரும் கலந்து கொண்டனர். சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள மூன்று இனங்களும் இணைந்து போராடியே சுதந்திரத்தை பெற்றுக்கொண்டோம். அதன் பின்னர் அரச வைபவங்களில் கலந்து கொள்வதில் அண்மைக்காலங்களில் இந்த அரசின் தலைமைத்துவம் அசமந்தமாக நடந்து கொள்வதாக ஒரு விசனம் நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில சம்பவங்கள் இப்படி நடக்கிறது.

தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் நீதியான சுதந்திரமான சட்டத்துறை ஆட்சியில் நாட்டமுள்ள சகல தரப்பும் இந்த பேரணிக்கு ஆதரவளிக்கிறது. இது வெறுமனே தமிழ் பேசும் மக்களின் போராட்டம் அல்ல. இந்த நாட்டின் சகல இன மக்களும் சேர்ந்து நேர்மையான நியாயமான ஆட்சி நடைபெற வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் .அராஜகம் இல்லாதொழிய வேண்டும் என்பவர்களின் போராட்டம். தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல இந்த நாட்டின் பெரும்பாண்மை மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினைகளும் இதில் உள்ளடங்கியுள்ளது.

தமிழர் தரப்பில் அவர்கள் சார்ந்த கோரிக்கைகள் தனியாகவும், முஸ்லிம்கள் தனியாகவும் பிரச்சினைகள் இருப்பதென்பது புவியியல் ரீதியாக இருந்துகொண்டுதான் வருகிறது.

காலாகாலமாக இருக்கும் அந்த முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்துவிடாது நாங்கள் எல்லோரும் எங்களின் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் உருவாகி வரும் இணைக்கப்பாடும் எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் அதே போல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் உருவாக வேண்டும்.

இந்த நாட்டின் அராஜகத்திற்கு ஒன்றுபடுகின்ற பேரணியில் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை வைப்பது ஆபத்தானது. அது தவிர்க்கப்பட வேண்டியது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும்! ரவூப் ஹக்கீம் | Tamil Leader | We Lead the Nation