Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்! வி.கே. சசிகலா

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2021 • 2:19 PM

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்! வி.கே. சசிகலா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே.
  • சசிகலாவின் தண்டனைக் காலம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
  • இந்த நிலையில், வாணியம்பாடி அருகில் வாகனத்தை நிறுத்திப் பேசிய சசிகலா, "அடக்கு முறைக்கு நான் அடிபணியப் போவதில்லை," என தெரிவித்தார்.
  • பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், அவர் மெதுவாகவே பயணம் செய்து சென்னைக்கு இரவில் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து அளவு:

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் தண்டனைக் காலம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சில நாட்கள் கர்நாடக மாநிலத்திலேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

அதற்குப் பிறகு திங்கட்கிழமை காலையில் பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்டார் சசிகலா. வழிநெடுக அவரது ஆதரவாளர்களும் அ.ம.மு.க. தொண்டர்களும் அவருக்கு வரவேற்பளித்தனர்.

இந்த நிலையில், வாணியம்பாடி அருகில் வாகனத்தை நிறுத்திப் பேசிய சசிகலா, "அடக்கு முறைக்கு நான் அடிபணியப் போவதில்லை," என தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, "நிச்சயமாக" என்று அவர் பதிலளித்தார். அ.தி.மு.க அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று கேட்டபோது, 'பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் சசிகலா.

ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்த சசிகலாவிடம், "அதிமுக கட்சியைக் கைப்பற்றுவீர்களா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு, "விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். அப்போது விரிவாக பேசுகிறேன்" என்று பதிலளித்தார்.

பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், அவர் மெதுவாகவே பயணம் செய்து சென்னைக்கு இரவில் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...