Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

அறிவூட்டலும் ஆர்வமூட்டலும் தடுப்பு மருந்தா? பாணியா?

T

The Leader Desk

பிப்ரவரி 5, 2021 • 12:59 AM

அறிவூட்டலும் ஆர்வமூட்டலும் தடுப்பு மருந்தா? பாணியா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா தொற்றுக்கான சுகாதார நடைமுறைகள் ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்தல் முகக்கவசம் என்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டிருந்த இலங்கை மக்கள் இப்போது தடுப்பூசி தொடர்பில் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.
  • இந்திய அரசாங்கம் வழங்கிய கொரோனா தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த 28ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார்.
  • தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
எழுத்து அளவு:

கொரோனா தொற்றுக்கான சுகாதார நடைமுறைகள்  ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்தல் முகக்கவசம் என்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டிருந்த இலங்கை மக்கள் இப்போது தடுப்பூசி தொடர்பில் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனினா தடுப்பூசியை இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான அவசரகாலத்திற்கு பயன்படுத்த தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்த நிலையில்,  இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.

இந்திய அரசாங்கம் வழங்கிய கொரோனா தடுப்புசிகளின் முதல்  தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த 28ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார். 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம்   முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் 60  வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் 31 இலட்சத்து 59 ஆயிரத்து 800  பேருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாளும் பணியாளர்கள் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 700  பேருக்கும், நோய்களுடன் வாழும் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 32  இலட்சத்து 22 ஆயிரத்து 510 பேருக்கும்  40 முதல் 59 வயதுக்குட்பட்ட எவ்வித நோய் அறிகுறிகளும் அற்ற 31 இலட்சத்து 14 ஆயிரத்து 660 பேருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தடுப்பூசியே தவிர நோய்க்கான மருந்தல்ல எனினும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள பொது மக்களில் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு மருந்தாக கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு பெருந்தொற்று அல்லது ஒரு மிக மோசமான தொற்றுநோய் மனிதர்களைத் தாக்கி, அவர்களுக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய உடல்நல பாதிப்புகளை உருவாக்கி, ஏதேனும் ஓர் உறுப்பு சேதம் அல்லது உயிர் பாதிப்போ நிகழ்ந்தால், அந்தக் கிருமியையும் அதன் நோய் தரும் நீட்சியையும் தடுக்கவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ”தடுப்பு மருந்து” என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...