Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

தடுப்பூசி விடயத்தில் மலையகத்தையும் பாருங்கள்! செந்தில் தொண்டமான்

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2021 • 7:56 AM

தடுப்பூசி விடயத்தில் மலையகத்தையும் பாருங்கள்! செந்தில் தொண்டமான்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு இலக்காகியுள்ள நாடுகளின் பட்டியலில், குளிருடனான காலநிலையையொத்த நாடுகளிலேயே பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
  • அந்தவகையில், இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் குளிருடன்கூடிய காலநிலையானது, இந்த கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சநிலை உள்ளது.
  • தவிர, இந்நாட்டில் கொத்தணி வாழ்க்கையை வாழ்ந்துவரும் மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு மத்தியில், இந்த வைரஸ் பரவல் அதிக வேகத்தில் பரவக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.
எழுத்து அளவு:

கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு இலக்காகியுள்ள நாடுகளின் பட்டியலில், குளிருடனான காலநிலையையொத்த நாடுகளிலேயே பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில், இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் குளிருடன்கூடிய காலநிலையானது, இந்த கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சநிலை உள்ளது.


தவிர, இந்நாட்டில் கொத்தணி வாழ்க்கையை வாழ்ந்துவரும் மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு மத்தியில், இந்த வைரஸ் பரவல் அதிக வேகத்தில் பரவக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி, அம்மக்களுடன் மக்களாகக் கடமையாற்றும் சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினர், பெரும்பாலும் பிரதேசம் தாண்டிச் சென்று கடமையாற்றுபவர்களாகவே அதிகளவில் காணப்படுவதால் அவர்களூடாகத் தொற்றுப்பரவல் ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

அவ்வாறான சில சம்பவங்களை, கடந்த காலங்களில் அவதானிக்கவும் நேர்ந்தது. அதனால், மலையக மக்களின் நலன் தொடர்பில் அதிக கரிசனை கொண்டு அம்மக்களுக்கும் அங்குள்ள முதியோர்களுக்கும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மேற்படி தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சுகாதாரத் துறையினரிடம் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ள அதேவேளை, மலையகத்துக்கு விநியோகிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை விட அதிகமான தொகையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...