Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

காத்தான்குடியில் முடக்கம் நீடிப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2021 • 7:48 AM

காத்தான்குடியில் முடக்கம் நீடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காத்தான்குடியில் கொரோனா நிலைமை காரணமாக 18 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டு, அவற்றில் 8 பிரிவுகள் தவிர்ந்த 10 பிரிவுகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது .
  • இவ்வாறாதொரு நிலையிலேயே 7 கிராம சேவகர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
  • “பின்னர் எமது பரிந்துரையை அவர்கள் கொரோனா தடுப்பு தேசிய செயலணிக்கு அனுப்பி, அவர்களின் இறுதித் தீர்மானத்தின்படியே விடுவிக்க முடியும்.
  • இந்நிலையில் காத்தான்குடி பிரதேசத்தின் 10 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள், நேற்று (31) முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்தாகக் கூறப்பட்ட நிலையில், இப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

எனினும், அவ்வாறானதொரு தீர்மானம் உத்தியோகபூர்வமாக எடுக்கப்படவில்லையெனவும் அவ்வாறான ஓர் அறிவிப்பு தேசிய மட்டத்திலிருந்து வரவில்லை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, மீண்டும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் கொரோனா நிலைமை காரணமாக 18 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டு, அவற்றில் 8 பிரிவுகள் தவிர்ந்த 10 பிரிவுகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறாதொரு நிலையிலேயே 7 கிராம சேவகர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபை மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறையினரால் இவ்வாறு இந்தக் கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, கடைகள் யாவும் திறக்கப்பட்டு நகரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தது.

“முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தை விடுவிப்பது தொடர்பில் உள்ளூர் மற்றும் உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையோரின் கலந்தாலோசனை, கள நிலைமைகளின் பின்பே தீர்மானிக்க முடியும் எனவும்
உத்தியோகபூர்வமாக முடக்கப்பட்ட பிரதேசத்தை அல்லது பிரதேசங்களை விடுவிப்பதாயின், அது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு நாம் எமது பரிந்துரையை அனுப்புவோம்.

“பின்னர் எமது பரிந்துரையை அவர்கள் கொரோனா தடுப்பு தேசிய செயலணிக்கு அனுப்பி, அவர்களின் இறுதித் தீர்மானத்தின்படியே விடுவிக்க முடியும்.

“இதனை விடுத்து இவ்வாறு உத்தியோகபூர்வமற்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது சட்ட விதிகளுக்குப் புறம்பானது” என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் காத்தான்குடி பிரதேசத்தின் 10 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...