Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கோத்தாபயவின் ஆட்சியில் லட்சணம் இதுதான் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள்! புபுது ஜயகொட

T

The Leader Desk

ஜனவரி 30, 2021 • 5:38 PM

கோத்தாபயவின் ஆட்சியில் லட்சணம் இதுதான் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள்! புபுது ஜயகொட

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (2) அவிஸாவலையில் நடைபெற்ற ” இந்த அரசாங்கத்திற்கு ஏன் முடியவில்லை?” என்ற தொனிப்பொருளில் நேற்று (29) அவிசாவலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே புபுது ஜயகொட மேற்கண்டவாறு கூறினார்.
  • அமைச்சர் துமிந்த திசாநாயகவின் சகோதரர் பிரான்ஸின் பாரிஸ் நகரின் இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கோத்தாபய ராஜபக்‌ஷ அதிகாரத்திற்கு வரும் போது தகுதியானவர்களுக்கு தகுதியான இடம் வழங்கப்படுமென வும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட மாட்டாதெனவும் கூறினார்.
எழுத்து அளவு:

நேற்று (2) அவிஸாவலையில் நடைபெற்ற ” இந்த அரசாங்கத்திற்கு ஏன் முடியவில்லை?” என்ற தொனிப்பொருளில் நேற்று (29) அவிசாவலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே புபுது ஜயகொட மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கோத்தாபய ராஜபக்‌ஷ அதிகாரத்திற்கு வரும் போது தகுதியானவர்களுக்கு தகுதியான இடம் வழங்கப்படுமென வும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட மாட்டாதெனவும் கூறினார். ஆனால், இன்று என்ன நடந்திருக்கிறது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மகள் அவுஸ்திரேலியாவின் சிடனி நகரின் இலங்கை தூதுவராலயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷவின் முன்னாள் காதலி அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் மகள் பிரான்ஸின் பாரிஸ் நகரின் இலங்கை தூதுவராலயத்தில் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் துமிந்த திசாநாயகவின் சகோதரர் பிரான்ஸின் பாரிஸ் நகரின் இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியின் சகோதரர் சிசெல்ஸின் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் ஊடகச் செயலாளரின் மகள் வியன்னா நகருக்கு மூன்றாவது செயலாளராக அனுப்பப்பட்டுள்ளார். அது மாத்திரமா?

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே அரசாங்கத்திற்கு விளக்குப் பிடிக்கும் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகளும் அவுஸ்திரேலிய இலங்கை தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளராக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சகல நியமனங்களையும் வெட்கமின்றி அமைச்சரவை அனுமதித்துள்ளது.வெளிநாட்டு ராஜதந்திர சேவைகளை தமது அடிவருடிகளிடம் ஒப்படைக்க இந்த நாடு அவர்களது பாரம்பரிய சொத்தா?

69 லட்சம் பேர் வாக்களித்து அறம் நிறைந்த நாட்டை உருவாக்குவதற்காக கொண்டு வந்த தலைவர்களின் லட்சணம் இதுதான்”.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தாபயவின் ஆட்சியில் லட்சணம் இதுதான் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள்! புபுது ஜயகொட | Tamil Leader | We Lead the Nation