Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ராஜபக்சக்களுக்கு கொரோனா தடுப்பூசி மக்களுக்கு!!

T

The Leader Desk

ஜனவரி 27, 2021 • 4:04 PM

ராஜபக்சக்களுக்கு கொரோனா தடுப்பூசி மக்களுக்கு!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க சற்று முன்னர் தெரிவித்தார்.
  • இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
  • தற்பொழுது நாம் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிக்கு சர்வதேச சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • மூன்றாம் கட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:

 நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க சற்று முன்னர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்பொழுது நடைபெறும் கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

2ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலில் நாட்டின் தலைவர் அதாவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வார்கள். இதன் மூலம் இந்த தடுப்பூசி தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். இந்த தடுப்பூசியின் மூலம் பெரும்பாலும் நாட்டு மக்களை இந்த கொடூர வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கூடியதாக இருக்கும்.

எமக்கு இருக்கும் வசதிகள் இதனை களஞ்சியப்படுத்துவதற்கு போதுமானதாக இருந்துள்ளமை அதிஷ்டமாகும். முதலில் உலகில் கண்டுப்பிடிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிக்கு களஞ்சியப்படுத்துவதற்கு குளிர்சாதன வசதி பெருமளவில் தேவை. தற்பொழுது நாம் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிக்கு சர்வதேச சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து நாளை கொண்டு வரப்படவுள்ள Oxford AstraZeneca தடுப்பு மருந்துக்கு எமது NMR நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூன்றாம் கட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை 34% ஆகும் அதாவது 3.4 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக சீனா 70 இலட்சம் தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ளது. இதேபோன்று ரஷ்யாவும் எமக்கு தடுப்;பு மருந்துகளை வழங்கவுள்ளது.

இந்த மருந்துகளுக்கான அங்கீகாரம் சர்வதேச ரீதியில் இன்னும் கிடைக்கவில்லை. இதேபோன்று எமது NMR நிறுவனம் இதுதொடர்பாக விரவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனம் எந்த தடையீடுகளும் இன்றி சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...