Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

நிர்வாக திறன்களுக்கு அப்பால் அரசியல் பின்புலத்தில் நியமனங்கள்!

T

The Leader Desk

ஜனவரி 26, 2021 • 12:23 PM

நிர்வாக திறன்களுக்கு அப்பால் அரசியல் பின்புலத்தில் நியமனங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள ‘நிதி மேலாண்மை அறிக்கையின் படி (Fiscal Management Report 2020–21) , Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனம் கடந்த 8 மாதங்களில் மட்டும் 688 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கிறது .
  • முதல் தர போட்டிகளின் பங்கு பற்றியுள்ள ஜெரம் ஜயரத்ன அவர்கள் இலங்கை A அணி சார்பாக வெறும் மூன்று போட்டிகளில் பங்கு பற்றி இருக்கிறார்.
  • இந்த 3 போட்டிகளிலும் மொத்தமாக 27 ஓட்டங்களை பெற்ற ஜெரம் ஜயரத்ன அவர்கள் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார் .
எழுத்து அளவு:

விமான நிலையங்கள், மற்றும் அதன் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவு (aviation regulatory knowledge), விமானச் சட்டங்கள் பற்றிய தெளிவு (aviation laws), தீவிர நிர்வாக திறன்கள் (serious managerial skills) என்பன பற்றிய தெளிவுள்ளவர்கள் மட்டுமே Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவன இயக்குனர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்கிற  நியதிக்கு  மாறாக  அரசியல் பின்புலத்திடன் குறித்த  நியமனங்கள்  மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள  ‘நிதி மேலாண்மை அறிக்கையின் படி (Fiscal Management Report 2020–21) , Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனம் கடந்த 8 மாதங்களில் மட்டும் 688 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கிறது .

இப்போது மகிந்த ராஜபக்ச அவர்களின் மற்றுமொரு மகனான யோசித ராஜபக்ச அவர்களின் மனைவியின் தந்தையாரான  (Father in law) ஜெரம் ஜயரத்ன அவர்கள்  மேற்கிந்திய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ள  இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட  இருக்கிறார் .

22 முதல் தர போட்டிகளின் பங்கு பற்றியுள்ள  ஜெரம் ஜயரத்ன அவர்கள் இலங்கை A அணி சார்பாக வெறும் மூன்று போட்டிகளில் பங்கு பற்றி இருக்கிறார். இந்த 3 போட்டிகளிலும் மொத்தமாக 27 ஓட்டங்களை பெற்ற ஜெரம் ஜயரத்ன அவர்கள் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார் .

Jerome Jayarathne appointed as COO of SLC 5095f97b fc09 487e bc34 03367932e956

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...