Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

T

The Leader Desk

ஜனவரி 25, 2021 • 5:03 PM

சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அணிவகுப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாடசாலை மாணவர்களை பயன்படுத்த கல்வி அமைச்சின் செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது அவர்களை ஆபத்தில் தள்ளும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
  • ஒவ்வொரு பாடசாலையின் மாணவர்களுக்கும் பொறுப்பாக ஒவ்வொரு ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும்.
  • பிரிகேடியர் பயிற்சி மூலம் பிரிகேடியர் நிர்வாகத்திற்கு அனுப்பிய தகவலுக்கு அமைய, சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி முகாம் 2021 ஜனவரி 25 முதல் பெப்ரவரி 4 வரை கொழும்பின் நாலந்தா கல்லூரி மற்றும் ஆனந்த மகளிர் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜனவரி 24 முதல் மேற்கண்ட கல்லூரிகளில் முகாம்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அணிவகுப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாடசாலை மாணவர்களை பயன்படுத்த கல்வி அமைச்சின் செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது அவர்களை ஆபத்தில் தள்ளும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என, "73ஆவது சுதந்திர தின அணிவகுப்புக்கு மாணவர் படையை பங்கேற்கச் செய்தல்" என்ற தலைப்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி.கே.பெரேரா ஜனவரி 20ஆம் திகதி அனுப்பி வைத்துள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”தற்போதைய கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுபோன்ற நீண்டகால முகாம்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின், பாடசாலை சுகாதார பிரிவு, சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவுக்கு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த கோரிக்கையை இந்த அமைச்சினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தயவுசெய்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.”

கடிதத்தின் படி, நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், 152 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 300 பாடசாலை மாணவர்கள் இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அணிவகுப்பு பயிற்சிக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கழித்து கல்வி அமைச்சு தனது முடிவை மாற்றியுள்ளது.

கல்விச் செயலாளருக்கு பதிலாக, மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் மற்றும் பின்வரும் அளவுகோல்களுக்கு உட்பட்டு மாணவர்கள் பங்கேற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

  1. சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் கடிதத்தின் நகலை கல்விச் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் அனுப்ப வேண்டும்.
  2. சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  3. சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களின் அனுமதி பெறப்பட வேண்டும்.
  4. பெற்றோரின் முழு அனுமதியை எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டும்.
  5. ஒவ்வொரு பாடசாலையின் மாணவர்களுக்கும் பொறுப்பாக ஒவ்வொரு ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும்.
  6. மாணவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனின், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஆலோசனையைப்பெற்று அதன்படி செயற்பட விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  7. இந்த திட்டத்தின் போது கொரோனா மாணவர் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

"73 வது சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது உங்கள் பொறுப்பு என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” மேலதிக கல்விச் செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிகேடியர் பயிற்சி மூலம் பிரிகேடியர் நிர்வாகத்திற்கு அனுப்பிய தகவலுக்கு அமைய, சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி முகாம் 2021 ஜனவரி 25 முதல் பெப்ரவரி 4 வரை கொழும்பின் நாலந்தா கல்லூரி மற்றும் ஆனந்த மகளிர் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 24 முதல் மேற்கண்ட கல்லூரிகளில் முகாம்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் 300 மாணவர்களை ஒன்றிணைக்கும் பயிற்சி முகாமை நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளதோடு, பயிற்சி குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்,
அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு பாடசாலைகளில் மாணவர்களுடன் குறைந்தபட்சம் 150 ஆசிரியர்களும் முகாமிட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அவர்களை பொறுப்பேற்பது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடசாலை மாணவர்களை தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதைவிட, அவர்களை அந்த அச்சுறுத்தலில் இருந்து மீட்பதன் முக்கியத்துவத்தை ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.



தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...