Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்!

T

The Leader Desk

ஜனவரி 25, 2021 • 4:35 PM

ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனவரி 25, 2021 திங்கள், மாலை 4 முதல் 6 மணி வரை, பொரளை, டொக்டர் எம்.எம் பெரேரா அரங்கில் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • "அந்த மனித முன்னோடியை எங்களிடமிருந்து பிரித்து 11 வருடங்கள் ஆகின்றன!" இதுவே இணையதளத்தின் தொனிப்பொருள்.
  • ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பற்றி ஆராய்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தேடுவோர் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென சந்தியா எக்னெலிகொட குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கையில் போரின்போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் மோதலுக்கு முன்னரான கலவரங்களின் போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவுக்கு 2017ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவினால் சர்வதேச வீரதீர பெண் விருது வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:

ஜனவரி 25, 2021 திங்கள், மாலை 4 முதல் 6 மணி வரை, பொரளை, டொக்டர் எம்.எம் பெரேரா அரங்கில் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"அந்த மனித முன்னோடியை எங்களிடமிருந்து பிரித்து  11 வருடங்கள் ஆகின்றன!" இதுவே இணையதளத்தின் தொனிப்பொருள்.

கடந்த 11 வருடங்களாக  காணாமல் போயுள்ள எக்னெலிகொடவிற்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் முனனெடுத்த அனைத்து முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளையும், பிரகீம் இலங்கையில் இருந்த காலத்தில் எழுதிய கட்டுரைகள், வரைந்த ஓவியங்கள் என அனைத்தையும் சேர்த்து  இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போன சிங்கள, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தகவல்களும் இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  சந்தியா எக்னலிகோடா மேலும் குறிப்பிடுகிறார்.

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையதள அறிமுக நிகழ்விற்கு ஏராளமானவர்களை பங்கேற்கச் செய்வது கடினம் என்பதால், அன்றைய தினம் பேஸ்புக் மூலமான நேரடி ஒளிபரப்பில் இணைந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பற்றி  ஆராய்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தேடுவோர் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென சந்தியா எக்னெலிகொட குறிப்பிட்டுள்ளார்.

”உலகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பற்றவர்களைப் பற்றிய நினைவலைகளை எழுதும் – எழுப்பும் - பாதை” வெளியீட்டின்போது ஒன்றிணையுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று  பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்.

காணாமல் போன தனது கணவரைத் தேடும் முயற்சியில் சந்தியா எக்னெலிகொட உலகின் மிக உயர்ந்த விருதையும் பெற்றார்.

sandya 265

இலங்கையில் போரின்போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் மோதலுக்கு முன்னரான கலவரங்களின் போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவுக்கு 2017ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவினால் சர்வதேச வீரதீர பெண் விருது வழங்கப்பட்டது.

காணாமற்போன தனது கணவர் பிகீத் எக்னெலிகொட பற்றிய உண்மையை வெளிப்படுத்த அதிகாரிகள் தடையாக இருந்தபோதிலும், 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றத்திற்கு செல்வதில் அவர் காட்டிய தைரியம் காரணமாகவே அவர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக அமெரிக்க உதவி வெளிவிவகார செயலாளர் தோமஸ் ஏ செனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்! | Tamil Leader | We Lead the Nation