Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும்! சரத்வீரசேகர

T

The Leader Desk

ஜனவரி 24, 2021 • 12:40 PM

பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும்! சரத்வீரசேகர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு இணங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உகந்த விடயம்.
  • இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
எழுத்து அளவு:

யங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு இணங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் தடுப்பில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அச்சுறுத்தல்கள் காணப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் கைதுகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்போதும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் காணப்படுகின்றதால் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை விசாரணை செய்வதற்கு இவ்வாறான சட்டங்கள் அவசியம். இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உகந்த விடயம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுமாறு தெரிவிக்கின்றது. ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக இங்கு வரப்போவதில்லை.

அவர்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக என்ன உதவியை வழங்குகின்றனர். பயங்கரவாதம் தீவிரவாதத்தினால் நெருக்கடிகனை அனுபவிக்கின்றவர்கள் நாங்கள் என்பதால் நாங்களே இதனை தீர்மானிக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...