Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இந்தோனீசியாவில் என்னதான் நடக்கிறது! முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு!

T

The Leader Desk

ஜனவரி 17, 2021 • 2:53 AM

இந்தோனீசியாவில் என்னதான் நடக்கிறது! முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுவரை மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை.
  • எரிமலை வெடிப்பு தொடர்பான காணொளியில், 3,676 மீட்டர் உயரம் கொண்ட எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல் பல வீடுகளின் மேல் இருப்பதைக் காட்டுகிறது.
  • "சம்பர் முஹுர் மற்றும் குரஹ் கொபான் ஆகிய கிராமங்கள், எரிமலை வெளியேற்றும் வெப்பத்தின் பாதையில் இருக்கிறது" என உள்ளூர் அதிகாரி தோரிகுல் ஹக் நேற்று (ஜனவரி 16) கூறினார்.
  • செமெரு எரிமலை வெடிப்பு நேற்று (ஜனவரி 16) மாலை உள்ளூர் நேரப்படி 5.24 மணிக்கு (ஜி.எம்.டி 10.24) நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
எழுத்து அளவு:

இதுவரை மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. எந்த உயிரிழப்புகளும் இதுவரை தெரியப்படுத்தவில்லை.

செமெரு மலைச் சரிவில் வாழும் கிராம மக்கள் இந்த வெடிப்பைக் குறித்து கவனமுடன் இருக்க வேண்டுமென தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் எச்சரித்திருக்கிறார்கள்.

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு தொடர்பான காணொளியில், 3,676 மீட்டர் உயரம் கொண்ட எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல் பல வீடுகளின் மேல் இருப்பதைக் காட்டுகிறது.

"சம்பர் முஹுர் மற்றும் குரஹ் கொபான் ஆகிய கிராமங்கள், எரிமலை வெளியேற்றும் வெப்பத்தின் பாதையில் இருக்கிறது" என உள்ளூர் அதிகாரி தோரிகுல் ஹக் நேற்று (ஜனவரி 16) கூறினார்.

குராஹ் கொபான் ஆற்றுப் படுகையில் வசிக்கும் மக்கள் குளிர்ச்சியான எரிமலை குழம்பு (Cold Lava) என்றழைக்கப்படும் ஒரு வகையான எரிமலைக் குழம்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கடுமையான மழைப் பொழிவுடன் எரிமலைக்குழம்பு சேரும் போது இந்த குளிர்ச்சியான லாவா உருவாகிறது.

செமெரு எரிமலை வெடிப்பு நேற்று (ஜனவரி 16) மாலை உள்ளூர் நேரப்படி 5.24 மணிக்கு (ஜி.எம்.டி 10.24) நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

எரிமலை வெடிப்பு

இந்தோனீசியா 'ரிங் ஆஃப் ஃபயர்' (எரிமலை வளையம்) என்றழைக்கப்படும் பசுபிப் பகுதியில் அமைந்திருக்கிறது. புவியின் நில அடுக்குகள் மோதிக் கொள்வதால் அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவைகள் நிகழும்.

செமெருவை 'மிகப் பெரிய மலை' என்பார்கள். இது தான் ஜாவாவில் இருக்கும் உயரமான செயல்பாட்டில் இருக்கும் எரிமலை. அதோடு இந்தோனீசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று.

இந்த எரிமலை கடந்த டிசம்பர் 2020-ல் வெடித்தது. அப்போது சுமாராக 550 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

கடந்த சில வாரங்களில் இந்தோனீசியா பல நிலச் சரிவுகள், சுலாவசித் தீவில் பலமான நிலநடுக்கம், ஸ்ரீவிஜயா விமான விபத்து என பல பிரச்சினைகளை எதிர்கொண்டது நினைவுகூறத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...