Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்ன! சட்டத்தரணிகள் சங்கம்

T

The Leader Desk

ஜனவரி 15, 2021 • 1:24 PM

சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்ன! சட்டத்தரணிகள் சங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது மிகவும் சிறந்த முறையில் சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதி அமைச்சரான அலி சப்ரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • எனினும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மற்றும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மதிப்பளிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • வழக்குகளை விரைவாக விசாரணைக்கெடுத்து முடிப்பதே தற்போதைய தேவையாக இருக்குமானால் 150 சட்டத்தரணிகளை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கு பதிலாக 6 மாற்று யோசனைகளை முன்வைப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இது மிகவும் சிறந்த முறையில் சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதி அமைச்சரான அலி சப்ரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் சார்ந்து எந்தவொரு கேள்வியும் தமது சங்கத்திற்கு இதுவரை விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்னவென்று புரிந்துகொள்ள முடியாதுள்ளதென சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

எனினும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மற்றும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மதிப்பளிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது பொலிஸ் மா அதிபரின் தலைமையில் அல்லாமல் சட்டமா அதிபரின் தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் எனவும், தனியான சேவையாக கருத்தப்பட வேண்டும் என்றும், பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுடன் உயர் நீதிமன்ற சட்டங்கள் அவர்களுக்கு அதிகபட்சமாக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்குகளை விரைவாக விசாரணைக்கெடுத்து முடிப்பதே தற்போதைய தேவையாக இருக்குமானால் 150 சட்டத்தரணிகளை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கு பதிலாக 6 மாற்று யோசனைகளை முன்வைப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இதன் பிரகாரம், குறித்த தீர்மானம் தொடர்பாகவும் சட்டத்தரணிகள் தொழில் தர்மம் குறித்தும் எழக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இயலுமை தமது சங்கத்திற்கு உள்ளதெனவும் இது குறித்து நீதி அமைச்சர் உடனடி கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...