காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கத்தை கருத்திற்கொண்டு, ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) இந்த அதிரடி முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் விநியோகம் அதிகரிப்பு:
இந்தத் தீர்மானத்தின் மூலம் சர்வதேச கொள்வனவாளர்கள் அதிகளவு எண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் உலகளாவிய எரிசக்தி விலைகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை வீழ்ச்சி:
ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் வகிபாகம்:
போருக்கு முன்னரே ஈரானின் பிரதான எண்ணெய் கொள்வனவாளராக சீனா காணப்பட்டது. தடைகள் காரணமாக சீனா ஈரானிடமிருந்து பெருமளவிலான தள்ளுபடி விலையில் எண்ணெயைப் பெற்றுக்கொண்டதாக அமெரிக்க திறைசேரிச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கக் கொள்கையில் மாற்றம்:
இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஈரான் மீதான அமெரிக்காவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்படும்.
ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள அமெரிக்கா, தற்போது ஈரானுக்கும் அந்தச் சலுகையை வழங்க முற்படுவது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்ப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.


