Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஓட்டமாவடி மஜ்மாநகரில் இன்று 2ஆவது நாளாக 08 ஜனாஸாக்கள் நல்லடக்கம் !

T

The Leader Desk

மார்ச் 6, 2021 • 5:08 PM

ஓட்டமாவடி மஜ்மாநகரில் இன்று 2ஆவது நாளாக 08 ஜனாஸாக்கள் நல்லடக்கம் !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரில் பாதுகாப்பில் உள்ளதுடன் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் பதினேழு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர் திகாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமாக எட்டு ஜனாசாக்கள் இன்று இரவு ஏழு மணிவரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி மஜ்மாநகர் பகுதியில் நேற்றைய தினம் 09 ஜனாசாக்களும் இன்றைய தினத்தில் இரவு ஏழுமணிவரை அடக்கப்பட்ட 08 ஜனாசாக்களையும் சேர்த்து 17 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அடக்கம் செய்யும் பணி இன்று இரவு 11மணிவரை தொடரவுள்ளதாகவும் களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரில் பாதுகாப்பில் உள்ளதுடன் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓட்டமாவடி மஜ்மாநகரில் இன்று 2ஆவது நாளாக 08 ஜனாஸாக்கள் நல்லடக்கம் ! | Tamil Leader | We Lead the Nation