ரீதியில் ஏற்பட்டுள்ள கப்பல் தட்டுப்பாடு, இலங்கையின் எரிபொருள் இறக்குமதியைப் பாரியளவில் பாதித்துள்ளது. இதனால் எரிபொருள் நுகர்வைக் கூடியவரை குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய போர் ஆரம்பமானது முதல், எண்ணெய் மற்றும் எரிவாயு தாங்கிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகப் பயணிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் ஏற்கனவே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தையின் நிலை:
-
விலை அதிகரிப்பு: போர் ஆரம்பமான பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் விமான எரிபொருட்களின் விலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
விநியோக வீழ்ச்சி: ஹோர்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்ட 20 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் விநியோகம் தற்போது மிகச் சொற்பமாகவே உள்ளது. இதன் விளைவாக, வளைகுடா நாடுகள் தமது மொத்த எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு குறைந்தது 10 மில்லியன் பீப்பாய்களால் குறைத்துள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் (IEA) மார்ச் 12 அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான தற்போதைய நிலைவரம்:
முன்னதாக ஓடர் செய்யப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் வருகை தருவதில் தாமதம் ஏற்படும் என ஜனாதிபதி அනුර குமார திஸாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்தார்.
எதிர்பார்க்கப்படும் கப்பல்கள்:
-
தனியார் நிறுவனங்கள்: சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) நிறுவனங்களால் ஓடர் செய்யப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
LIOC: உள்ளூர் எரிபொருள் விநியோகத்தில் நான்கில் ஒரு பங்கை (1/4) கையாளும் லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) ஓடர் செய்துள்ள கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


