Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

வடக்கில் பாடசாலைகளுக்குள் மத நூல்களை விநியோகிக்கத் தடை!

T

The Leader Desk

மார்ச் 19, 2026 • 4:02 AM

வடக்கில் பாடசாலைகளுக்குள் மத நூல்களை விநியோகிக்கத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
  • மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.
  • இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
எழுத்து அளவு:

அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகப் புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, குறித்த விநியோகமானது றோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

00-4.jpeg

இதேவேளை, வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததார் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி திருநீறு அணிவித்து மரியாதை செய்துள்ளார் சிவசேனை அமைப்பை சேர்ந்தவர்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில் , பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

குறித்த விடயம் சர்ச்சையான நிலையில் சிவசேனை அமைப்பை சேர்ந்த ஜெயமாறன் என்பவர் தலைமை பொலிஸ் நிலையத்தில் இலவசமாக பைபிள் வழங்கும் நடவடிக்கை " மத கலவரத்தை தூண்டும் " எனவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் , வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கு அது தொடர்பில் அறிவித்த நிலையில் , குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது முறைப்பாட்டை ஏற்று , உடனடியாக நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ணவிற்கு சிவசேனையை சேர்ந்த ஜெயமாறன் நன்றி தெரிவித்து , பொன்னாடை போர்த்தி திருநீறு பட்டை அணிவித்து கௌரவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...