Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா!

T

The Leader Desk

மார்ச் 18, 2026 • 4:26 AM

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும், இப்போது தாக்குதல் நடத்தினால் மிக விரைவான வெற்றியைப் பெறலாம் என்றும் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இராணுவ வீராங்கனையான இவரது மனைவி ஷானன் கென்ட், 2019 ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது பதவிக்காலத்தின் போது, முடிவில்லாத போர்களில் அமெரிக்காவை சிக்க வைக்காமல் இராணுவ பலத்தை எவ்வாறு தீர்க்கமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து அவருக்குச் சிறந்த புரிதல் இருந்ததாக கென்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பத்திலேயே உயர் இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் உள்ள செல்வாக்குமிக்க குழுக்கள் இணைந்து மிகவும் நுணுக்கமான முறையில் தவறான தகவல்களைப் பரப்பும் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் மூலம் ட்ரம்ப்பின் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' என்ற கொள்கையை முழுமையாக முடக்கி, ஈரானுடன் ஒரு போரை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை அவர்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும், இப்போது தாக்குதல் நடத்தினால் மிக விரைவான வெற்றியைப் பெறலாம் என்றும் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலத்தில் அமெரிக்காவை ஈராக் போரில் சிக்க வைப்பதற்காக இஸ்ரேல் பயன்படுத்திய தந்திரம் என்றும் ஜோ கென்ட் தனது கடிதத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

45 வயதான கென்ட், அமெரிக்க விசேட படையணி மற்றும் சி.ஐ.ஏ ஆகியவற்றின் அனுபவமிக்க அதிகாரி ஆவார். இராணுவ வீராங்கனையான இவரது மனைவி ஷானன் கென்ட், 2019 ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...