Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மின்சாரத் தடை அமுலாகலாம்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் சூசக அறிவிப்பு!

T

The Leader Desk

மார்ச் 17, 2026 • 6:09 AM

மின்சாரத் தடை அமுலாகலாம்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் சூசக அறிவிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமுல்படுத்தப்படாத போதிலும், வரும் நாட்களில் மின்சாரத்தைக் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
  • இன்று (17) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட மின்சாரத் தடை குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
  • ஆனால், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய ஒரு காலம் ஏற்படவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அமுல்படுத்தப்படாத போதிலும், வரும் நாட்களில் மின்சாரத்தைக் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (17) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட மின்சாரத் தடை குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"இதுவரை ஒரு மணித்தியாலமேனும் மின்சாரத்தைத் துண்டிக்காமல் நாம் சேவையை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய ஒரு காலம் ஏற்படவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களே இந்த அபாயத்திற்குக் காரணமாகும்.

இதுவரை தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்ட போதிலும், நிலைமை மோசமடைந்தால் மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியாது என அமைச்சர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மின்சாரத் தடை அமுலாகலாம்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் சூசக அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation