Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

17 நாட்களின் பின் பச்சிளம் குழந்தை உட்பட 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு!

T

The Leader Desk

மே 18, 2023 • 12:32 PM

17 நாட்களின் பின் பச்சிளம் குழந்தை உட்பட 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொலம்பிய அமேசான் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
  • தற்போது, அந்த அடர்ந்த காட்டிற்குள் இருந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 11 மாத குழந்தை உட்பட நான்கு பழங்குடியின குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நேற்று தெரிவித்தார்.
  • அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயர் தப்பியுள்ளனர்.
  • இவர்களை, அமேசான் காட்டிற்குள் தேட, 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை மோப்ப நாய்களுடன் சென்றுள்ளனர்.
எழுத்து அளவு:



கொலம்பிய அமேசான் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

தற்போது, அந்த அடர்ந்த காட்டிற்குள் இருந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 11 மாத குழந்தை உட்பட நான்கு பழங்குடியின குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நேற்று தெரிவித்தார்.

இதனை, “நாட்டிற்கு மகிழ்ச்சி” என்று கூறியதோடு, இராணுவத்தின் கடினமான தேடல் முயற்சிகளுக்கு பின் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெட்ரோ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மே மாதம் முதலாம் திகதியன்று விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயர் தப்பியுள்ளனர்.

இவர்களை, அமேசான் காட்டிற்குள் தேட, 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை மோப்ப நாய்களுடன் சென்றுள்ளனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 சிறுவர்/சிறுமிகள் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

17 நாட்களின் பின் பச்சிளம் குழந்தை உட்பட 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு! | Tamil Leader | We Lead the Nation