ஸ்கூட்டரைச் சுமந்து கொண்டு பெற்றோல் தேடிச் சென்ற வினோதச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், இருவர் ஒரு ஸ்கூட்டரில் பயணிக்கும் அதேவேளை, தமக்கு நடுவே மற்றுமொரு ஸ்கூட்டரைச் சமநிலைப்படுத்திச் சுமந்து செல்வதைக் காணமுடிகிறது.
வைரலாகும் பின்னணி:
வீடியோவில் உள்ளவர்களின் கருத்துப்படி:
ஒன்றுக்கு மாத்திரம் பெற்றோல்:
நீண்ட தேடுதலின் பின்னர் அவர்களுக்கு ஒரு ஸ்கூட்டருக்கு மாத்திரமே பெற்றோல் கிடைத்துள்ளது.
சுமந்து சென்ற காரணம்:
மற்றைய ஸ்கூட்டரை அங்கேயே விட்டுச் செல்ல விரும்பாத அவர்கள், அதனையும் சுமந்துகொண்டு அடுத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தைத் தேடி இவ்வாறு பயணித்துள்ளனர்.
மஹியங்கனையில் தட்டுப்பாடு:
மஹியங்கனைப் பகுதியிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்துள்ளதாகவும், வாகனங்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க பல நிலையங்கள் கயிறுகளைக் கட்டி மூடியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் வாகன சாரதிகள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளதாக இணையவாசிகள் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.


