Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

தனியார் பஸ்களுக்கு CTB டிப்போக்களில் எரிபொருள் நிரப்பலாம்!

T

The Leader Desk

மார்ச் 15, 2026 • 4:38 AM

தனியார் பஸ்களுக்கு CTB டிப்போக்களில் எரிபொருள் நிரப்பலாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச - CTB) சொந்தமான சாலைகள் (Depots) ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
  • "நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்படுங்கள்" - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மொரட்டுவைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, தற்போதைய இக்கட்டான சூழலில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
  • அத்துடன், உற்பத்திப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச - CTB) சொந்தமான சாலைகள் (Depots) ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், உற்பத்திப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

"நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்படுங்கள்" - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

மொரட்டுவைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, தற்போதைய இக்கட்டான சூழலில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"இந்த நேரத்தில் முழு நாட்டு மக்களிடமும் அரசாங்கம் என்ற ரீதியில் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்; உங்கள் குடும்பத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்காமல், நாட்டைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள்.

"எனவே, எரிபொருள் பாவனையை இயன்றளவு மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்பதற்காகத் தேவையில்லாமல் வாகனங்களை ஓட்டாமல், அதனை முறையாக முகாமைத்துவம் செய்யுங்கள்."

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இலங்கையிலும் இந்த மட்டுப்பாடுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தனியார் பஸ்களுக்கு CTB டிப்போக்களில் எரிபொருள் நிரப்பலாம்! | Tamil Leader | We Lead the Nation