Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இன்று காலை 6 மணி முதல் எரிபொருளைப் பெற QR குறியீடு கட்டாயம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

T

The Leader Desk

மார்ச் 15, 2026 • 4:12 AM

இன்று காலை 6 மணி முதல் எரிபொருளைப் பெற QR குறியீடு கட்டாயம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருள் தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாலும், கையிருப்பிலுள்ள எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் இன்று (15) காலை 6 மணி முதல் மீண்டும் QR குறியீட்டு முறை நடைமுறைக்கு வருகின்றது.
  • வாகன உரிமையாளர்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் ஊடாகத் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • ஏற்கனவே பதிவு செய்தவர்கள்: வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லையெனில், நேற்று (14) நள்ளிரவு முதல் பழைய குறியீட்டையே தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தலாம்.
  • புதிய பதிவுகள்: வாகன உரிமையாளர் மாறியிருந்தால் அல்லது இதுவரையில் பதிவு செய்யாத புதிய வாகனங்கள் எனின், இன்று (15) காலை 6 மணி முதல் இணையதளத்தில் புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
எழுத்து அளவு:

எரிபொருள் தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாலும், கையிருப்பிலுள்ள எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் இன்று (15) காலை 6 மணி முதல் மீண்டும் QR குறியீட்டு முறை நடைமுறைக்கு வருகின்றது.

எரிசக்தி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பின்படி, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வது எப்படி?
வாகன உரிமையாளர்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் ஊடாகத் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏற்கனவே பதிவு செய்தவர்கள்: வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லையெனில், நேற்று (14) நள்ளிரவு முதல் பழைய குறியீட்டையே தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தலாம்.

புதிய பதிவுகள்: வாகன உரிமையாளர் மாறியிருந்தால் அல்லது இதுவரையில் பதிவு செய்யாத புதிய வாகனங்கள் எனின், இன்று (15) காலை 6 மணி முதல் இணையதளத்தில் புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு:

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்படவுள்ள எரிபொருள் விபரங்கள் வருமாறு:'

வாகன வகை                                                   எரிபொருள் அளவு (லீற்றர்)

மோட்டார் சைக்கிள்                                                    05 லீற்றர்

முச்சக்கர வண்டி                                                         15 லீற்றர்

கார் (Car)                                                                         15 லீற்றர்

வேன் (Van)                                                                      40 லீற்றர்

பஸ் (Bus)                                                                           60 லீற்றர்

லொறி (Lorry)                                                                  200 லீற்றர்

விசேட தேவை வாகனங்கள்                                     40 லீற்றர்

காணி வாகனங்கள் (Land Vehicles)                           25 லீற்றர்

அத்துடன், தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) ஊடாகப் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...