வெளியேற்றுவதற்கு முன்னர், அது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மகாவலி அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் கிராம மக்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கை
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம் டி ஆப்ரூ (Vikum de Abrew) பின்வருமாறு தெரிவித்தார்:
இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, கிராமத்தின் பூர்வீகக் குடிகள் அடையாளம் காணப்படுவர்.
அவர்களுக்கு மாற்று காணிகள் அல்லது உரிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மனுதாரர் தரப்பு வாதம்
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனிஷ்க விதாரண (Kanishka Vitharana), இந்த விசாரணை முடியும் வரை மக்கள் தற்போது வசிக்கும் இடங்களிலேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றில் வலியுறுத்தினார்.
நீதிமன்றின் தீர்ப்பு
இரு தரப்பு இணக்கப்பாட்டையும் கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்யத் தீர்மானித்தது. எவ்வாறாயினும், நடத்தப்படும் விசாரணையின் பின்னர் உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், மீண்டும் இந்த வழக்கை ஒரு பிரேரணையின் (Motion) ஊடாக விசாரணைக்கு அழைக்க முடியும் என நீதியரசர்கள் மனுதாரர்களுக்கு அறிவித்தனர்.


