முன்னெடுப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 6 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கு போர் தொடர்ந்து நீடித்தால் இலங்கையின் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த கவலையை வௌியிட்டார். அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், தேவையான எரிபொருள் கையிருப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவை அவர் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு இந்தியத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்திய அதிகாரிகள் ஏற்கனவே ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் நிச்சயமற்ற சூழலில், இலங்கையில் தடையில்லாத மற்றும் பாதுகாப்பான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என அரசாங்கத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


