தற்காலிகமாக நீக்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
தற்போது கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பல்களில் உள்ள ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி வரை உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் (US Treasury Department) அறிவித்துள்ளது.
சந்தையை நிலைப்படுத்தும் முயற்சி
ஈரான் - அமெரிக்கப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகளாவிய எரிசக்தி சந்தையை (Global Energy Market) ஸ்திரமாகப் பேணும் நோக்கோலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியைத் தணிக்க இந்தத் தளர்வு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சலுகை
இதற்கு முன்னதாக, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசத்தை அமெரிக்கா வழங்கியிருந்தது.
அதன்படி, கடந்த மார்ச் 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ரஷ்ய கூட்டமைப்பிற்குச் சொந்தமான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. தற்போது இந்தச் சலுகை ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


