Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பிரித்தானிய ஹோட்டலில் நிர்வாணத்தைக் காட்டி அட்டகாசம்: குற்றவாளியானார் இலங்கையர்!

T

The Leader Desk

மார்ச் 12, 2026 • 4:51 AM

பிரித்தானிய ஹோட்டலில் நிர்வாணத்தைக் காட்டி அட்டகாசம்: குற்றவாளியானார் இலங்கையர்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊழியர்கள் இருவரைத் தாக்கி, அவர்கள் முன்னிலையில் நிர்வாணத்தைக் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளியாகத் தீர்ப்பளித்துள்ளது.
  • கடந்த 2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி சவுதாம்ப்டனில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' (Highfield House) ஹோட்டலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • இதன்போது, 'நான் இலங்கையைச் சேர்ந்தவன்.
எழுத்து அளவு:

ஊழியர்கள் இருவரைத் தாக்கி, அவர்கள் முன்னிலையில் நிர்வாணத்தைக் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை நீதிமன்றம் குற்றவாளியாகத் தீர்ப்பளித்துள்ளது.

38 வயதான சுகீர்த்தன் தங்கராசா எனும் நபருக்கு எதிராகவே போர்ட்ஸ்மவுத் கிரவுன் (Portsmouth Crown Court) நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

கடந்த 2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி சவுதாம்ப்டனில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' (Highfield House) ஹோட்டலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணையின் போது சந்தேகநபருக்கு நீதிமன்றத்தினால் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியும் வழங்கப்பட்டிருந்தது.

வழக்கைத் தாக்கல் செய்த அரச சட்டத்தரணி ஜாக் ஃபர்னஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்:

"தங்கராசா தனது கைபேசி (Mobile Phone) வேலை செய்யாத காரணத்தினால் ஆத்திரமடைந்து, ஹோட்டலின் வரவேற்பு உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, 'நான் இலங்கையைச் சேர்ந்தவன். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உங்களைப் போன்ற சிறிய மனிதர்கள் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும்' எனக்கூறி ஊழியர்களைத் திட்டியுள்ளார்."
வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணத்தைக் காட்டியதுடன், அதனைத் தடுக்க முயன்ற இரு ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். ஊழியர்களைத் தாக்கியதை அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.

சம்பவ இடத்திலிருந்த பாதுகாப்பு கமெரா (CCTV) காட்சிகள் மூலம் இக்குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தான் நிர்வாணத்தைக் காட்டியதை ஏற்றுக்கொண்ட போதிலும், அது ஒருவரை அச்சுறுத்தும் நோக்கத்தில் (Intent to cause alarm or distress) செய்யப்படவில்லை என அவர் வாதிட்டார்.

எனினும், அனைத்து சாட்சியங்களையும் ஆராய்ந்த ஜூரி சபை (Jury), அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...