Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

'இலங்கை அருகே ஈரானியக் கப்பலை ஏன் அழித்தீர்கள்?': அமெரிக்க இராணுவத்திடம் ட்ரம்ப் கேள்வி!

T

The Leader Desk

மார்ச் 12, 2026 • 3:59 AM

'இலங்கை அருகே ஈரானியக் கப்பலை ஏன் அழித்தீர்கள்?': அமெரிக்க இராணுவத்திடம் ட்ரம்ப் கேள்வி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
  • கடந்த வாரம் இலங்கை அருகே சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'பிரிகேட்' (Frigate) ரக ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா (IRIS Dena) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
  • இத்தாக்கதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்தனர்.
எழுத்து அளவு:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கென்டக்கி (Kentucky) மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த போர்க்கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக, அதனை ஏன் அழித்தீர்கள் எனத் தான் இராணுவ அதிகாரிகளிடம் வினவியதாக அவர் குறிப்பிட்டார்.

"நான் கேட்டேன், ஏன் நாம் அவர்களைக் கொன்றோம்? ஏன் நம்மால் அவர்களைக் கைது செய்து, அந்தக் கப்பலை எமது கடற்படைப் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாமல் போனது?" என ட்ரம்ப் அங்கு கேள்வி எழுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், கப்பலைக் கைப்பற்றுவதை விட அதனை மூழ்கடிப்பதே சிறந்தது எனத் தனது ஜெனரல் ஒருவர் தனக்குக் கூறியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அந்த அதிகாரி அதனை "ஐயா, அது மிகவும் வேடிக்கையாக (Fun) இருக்கும்" என வர்ணித்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இலங்கை அருகே சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'பிரிகேட்' (Frigate) ரக ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா (IRIS Dena) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்கதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்தனர்.

"ஈரான் மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை"

இதேவேளை, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் நிறைவடையவில்லை என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றில் எந்தவொரு நாட்டிற்கும் நடத்தப்படாத அளவிலான மிகக் கொடூரமான தாக்குதல்களை அமெரிக்கா ஈரான் மீது நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் தற்போது தனது கடற்படை, விமானப்படை, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராடார் கட்டமைப்புக்கள் அனைத்தையும் இழந்து நிற்பதுடன், அந்நாட்டின் முக்கிய தலைவர்களையும் இழந்துள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'இலங்கை அருகே ஈரானியக் கப்பலை ஏன் அழித்தீர்கள்?': அமெரிக்க இராணுவத்திடம் ட்ரம்ப் கேள்வி! | Tamil Leader | We Lead the Nation