புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்காக இன்று மற்றும் நாளை விசேட பேருந்துக்கள் சேவையில்

ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப அந்த பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு புகையிரதங்கள் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத துறை துணை பொது மேலாளர் என்.ஜே..இடிபோலகே குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி